தபால் தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் இன்றும் தொடர்கிறது

தபால் தொழிற்சங்கங்களின் தொடர்ச்சியான வேலைநிறுத்தம் இன்று நான்காவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகிறது .

19 கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த 17 ஆம் திகதி நள்ளிரவு முதல் நாட்டின் அனைத்து தபால் அலுவலகங்களிலும் தபால் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை ஆரம்பித்தன.

தபால் ஊழியர்களின் வேலைநிறுத்ததால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இதேநேரம் தபால் நிர்வாகம் நேற்று (20) தங்கள் கோரிக்கைகள் தொடர்பில் கலந்துரையாட வாய்ப்பு வழங்காததால், இன்றும் வேலைநிறுத்தத்தை தொடரப்போவதாக தபால் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன .