தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடர்கிறது

தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு இன்று 5 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகிறது.

19 கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த 17 ஆம் திகதியிலிருந்து தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேநேரம் முறையான அனுமதி இன்றி பணிக்கு சமூகமளிக்காத தபால் ஊழியர்களின் சம்பளம் விடுவிக்கப்படமாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் இரத்து செய்யப்பட்டுள்ளதால், அனைவரையும் உடனடியாக பணிக்குத் திரும்புமாறும் , சுகவீனம் விடுமுறை என்றால் அரச மருத்துவ சான்றிதழ்களைச் சமர்ப்பிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பால் சுமார் 100 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.