தனிமையில் இருந்த இளைஞன் மீது வீடு புகுந்து தாக்குதல்

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வேம்படி வத்திராயன் பகுதியில் இளைஞர் ஒருவன் மீது வீடு புகுந்து தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

நேற்று வியாழக்கிழமை பிற்பகல் இடம் பெற்ற குறித்த சம்பவத்தில், காயமடைந்த இளைஞன் 1990 அவசர நோயாளர் காவு சேவை ஊடாக பருத்தித்திறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

தாக்குதலில் காயமடைந்ய இளைஞன் அருகிலுள்ள நரசிம்மர் ஆலயத்திற்கு செல்லும் போது தாக்குதல் நடாத்தியவர்கள் அவரை நாளாந்தம் கேலி செய்து வந்ததாகவும், அந்நிலையில் நேற்று அவர்களே வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தாய் தந்தையை இழந்த நிலையில் குறித்த இளைஞனும் அவரது சகோதரனும் மட்டுமே வசித்து வந்துள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளானவரின் சகோதரன் தென்பகுதியில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்று வருவதாகவும், குறித்த இளைஞர் நேற்று தனிமையிலேயே இருந்ததாகவும், அவரை அவரது அயலவர்களே மீட்டு 1990 நோயாளர் காவு வண்டியில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலைக்கு அனுப்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.