டெஸ்ட் தொடரை கைப்பற்றுமா இலங்கை?
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது.
போட்டியில் தமது 2 ஆவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் பங்களாதேஷ் அணி இன்றைய ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 115 ஓட்டங்களை பெற்றுள்ளது.
துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணியின் லிட்டன் தாஸ் 13 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார்.
பந்துவீச்சில் பிரபாத் ஜெயசூர்யா மற்றும் தனஞ்ஜய டி சில்வா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
முன்னதாக தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 458 ஓட்டங்களையும், பங்களாதேஷ் அணி 247 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டது.
போட்டியின் 4 ஆம் நாள் ஆட்டம் நாளை நடைபெறவுள்ளது.