டெஸ்ட் கிரிக்கெட்டை ஆளப்போகும் ஜெய்ஸ்வால் – மார்க் வாக் புகழாரம்

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் அதிரடி ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சர்வதேச டெஸ்ட் அரங்கில் அசுர வேகத்தில் சாதனைகளை படைத்து வருகின்றார்.

இந்தநிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டின் அடுத்த தலைசிறந்த துடுப்பாட்டவீரர் ஜெய்ஸ்வால் தான் என அவுஸ்திரேலிய முன்னாள் வீரர் மார்க் வாக் (Mark Waugh) பாராட்டியுள்ளார்.

24 வயதான இந்த இடதுகை ஆரம்ப துடுப்பாட்ட வீரர், மிகக்குறுகிய காலத்தில் இந்திய அணியின் தவிர்க்க முடியாத சக்தியாக மாறியுள்ளார்.

ஜெய்ஸ்வாலின் ஆட்டம் குறித்து மார்க் வாக் கூறியதாவது:

“இளம் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அடுத்த சிறந்த துடுப்பாட்ட வீரராக இருப்பார். அவரது உயர்மட்ட நுட்பம் (High-level Technique), மன உறுதி (Mental Toughness) மற்றும் ஆட்டத்தில் அவர் காட்டும் நிலைத்தன்மை (Consistency) ஆகியவை உண்மையிலேயே பாராட்டத்தக்கது.” என தெரிவித்துள்ளார்.