டெல்லியிலுள்ள பல பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
டெல்லியிலுள்ள பல பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மின்னஞ்சல் ஊடாக குறித்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து பாடசாலை நிர்வாகத்தினர் காவல்துறையினருக்கு தகவல் அளித்ததையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மாணவர்கள் குறித்த பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
அத்துடன் குறித்த பாடசாலைகளுக்கு விடுமுறையும் வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட அனைத்து பாடசாலைகளிலும் அதிரடி சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
முன்னதாக கடந்த மாதமும் இதேபோல் டெல்லியில் உள்ள பல பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.