டெங்கு நோய் குறித்து சிவப்பு எச்சரிக்கை

டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இன்று 22,294 சுகாதார நிலையங்களில் விசேட சோதனை இடம்பெற்றது.

நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய 4,965 இடங்கள் இதன்போது அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 553 சுகாதார நிலையங்களுக்கு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் பிரசிலா சமரவீர தெரிவித்துள்ளார்.

குறித்த வேலைத்திட்டம் 16 மாவட்டங்களை இலக்காக கொண்டு முன்னெடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 27,932 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த காலப்பகுதியில் 16 டெங்கு பேர் டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.