டெங்கு நுளம்புக்கான புகை விசிறல்

-மூதூர் நிருபர்-

மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் ஏற்பாட்டில் தோப்பூர் பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை டெங்கு நுளம்புக்கான புகை விசிறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மழை பெய்து ஓய்ந்துள்ள நிலையில் டெங்கு நோய் பரவுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகிறன.

இதன் காரணமாக பாடசாலைகள்,டெங்கு பரவும் அபாயமுள்ள பொது இடங்கள் என்பவற்றை இலக்காகக் கொண்டு இவ்வாறு புகை விசிறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.