‘ஜெயிலர் 2’ திரைப்படம் குறித்து ரஜினிகாந்த் கொடுத்த அப்டேட்

 

‘கூலி’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்2’ திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

சில தினங்களுக்கு முன்பு படக்குழுவினர் கேரள மாநிலத்தின் பாலக்காட்டிற்கு சென்றபோது, சண்டை உள்ளிட்ட பல்வேறு காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து படப்பிடிப்புகளை நிறைவு செய்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார்.

இதன்போது அவர் கூறுகையில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந் திகதி ‘ஜெயிலர்2’ வெளியாகும் என தெரிவித்தார்.