‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் நகைச்சுவைக்கு பஞ்சமில்லை..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கூலி’.

இத்திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூலை குவித்தது.

‘கூலி’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்2’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

‘ஜெயிலர்’ முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து 2ஆம் பாகம் உருவாகி வருகிறது.

இந்தநிலையில் குறித்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் திகதி ‘ஜெயிலர்2’ திரைப்படம் வெளியாகும் என தெரிவித்து இருந்தார்.

இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன், பாலய்யா, சிவராஜ்குமார், மோகன்லால், எஸ்.ஜே.சூர்யா, சூரஜ் வெஞ்சரமூடு, சந்தானம், ஃபஹத் பாசில், தமன்னா, வித்யா பாலன் ஆகியோர் நடிப்பதாக கூறப்படுகிறது.

‘ஜெயிலர்2’ திரைப்படத்தில் சந்தானம் நடிப்பதால் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் ‘ஜெயிலர்2’ படப்பிடிப்பிற்காக சந்தானம் அடுத்த மாதம் முதல் பணியாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.