ஜூலி சங் – விஜித ஹேரத் சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie Chung), தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து இலங்கையிலிருந்து விடைபெறுவதை முன்னிட்டு, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை இன்று வெள்ளிக்கிழமை  சந்தித்துக் கலந்துரையாடினார்.

தனது பதவிக்காலத்தில் இலங்கை – அமெரிக்க உறவுகளை வலுப்படுத்துவதற்காக ஜூலி சங் மேற்கொண்ட அயராத முயற்சிகளுக்கு அமைச்சர் விஜித ஹேரத் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்தார்.

குறிப்பாக, ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி அனர்த்தத்தின் பின்னர் அமெரிக்க அதிகாரிகளிடமிருந்து விரைவான உதவிகளை ஒருங்கிணைத்து வழங்கியமைக்காக அமைச்சர் தனது நன்றியை விசேடமாகத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அமைச்சர் விஜித ஹேரத் தனது எக்ஸ்  தளத்தில், தூதுவரின் அர்ப்பணிப்புமிக்க சேவையைப் பாராட்டிப் பதிவிட்டுள்ளார்.