
“ஜன நாயகன்” திரைப்படத்துக்கு அடி மேல் அடி : ரசிகர்கள் சோகத்தில்!
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் உருவான திரைப்படம் ‘ஜன நாயகன்’, இம்மாதம் கடந்த 9 ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாமையினால் இந்த திரைப்படம் வெளியாவதில் சிக்கல்கள் எழுந்தன.
திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவது தொடர்பாகத் தணிக்கை சபை தாக்கல் செய்த மேன்முறையீட்டு வழக்கை, சென்னை மேல் நீதிமன்றம் திகதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது.
இந்தநிலையில் குறித்த திரைப்படத்திற்கான இறுதி தீர்ப்பு இன்று செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி ‘ஜன நாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கை சான்று உடனே வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி தீர்ப்பை சென்னை மேல் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
