வெள்ளப்பெருக்கு காரணமாக மூடப்பட்டிருந்த சேருவில பிரதான வீதி, நீர் முழுமையாக வடிந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் பொதுப் போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டுள்ளது.
இதனால், அப்பகுதியில் போக்குவரத்து இயல்பு நிலை வழமைக்குத் திரும்பியுள்ளது.
வாகனங்கள் எந்தவிதத் தடையுமின்றி செல்ல முடிவதால், பிரயாணிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
எனினும், பிரதான வீதி திறக்கப்பட்டாலும், கந்தளாய் ஊடாக மட்டக்களப்பு சேருநுவர செல்லும் வீதியின் நிலைமை குறித்து அதிக கவனம் தேவைப்படுகிறது.
இந்த காபட் வீதியில் வெள்ளம் காரணமாக ஆங்காங்கே சில இடங்களில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதால், வாகனப் போக்குவரத்துக்கு சவாலான நிலை காணப்படுகிறது.
இதன் காரணமாக, இந்த வீதியை உபயோகிக்கும் வாகன சாரதிகள்மற்றும் பயணிகள் அனைவரும் விபத்துகளைத் தவிர்க்கும் பொருட்டு அதிக கவனத்துடனும், நிதானத்துடனும் பயணிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட தரப்பினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.



