செம்மணியில் அடையாளம் காணப்படும் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

-யாழ் நிருபர்-

செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாவது கட்டத்தின் 12ஆவது நாள் அகழ்வுப் பணிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்படுகின்றன.

மேலும் இன்றுவரை 44 எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டதுடன் 47 எலும்புக்கூடுகள் இதுவரை அடையாளம் காணப்பட்டன.

குறித்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படும் பகுதிக்கு அருகாமையில் ட்ரோன் மூலம் ஆய்வு செய்ததன் அடிப்படையில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை தொடக்கம் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறித்த பகுதியிலும் சான்றும் பொருட்கள் அடையாளம் காணப்பட்டன.

மேலும், அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இடத்திற்கு அருகாமையில் இன்றையதினம் ஜேசிபி இயந்திரம் மூலம் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டபோது அதிலும் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில், தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ்சோமதேவா அவர்களின் குழுவின் பங்கேற்போடு இந்த அகழ்வுப் பணிகள் இன்றும் முன்னெடுக்கப்பட்டது.

 

  • Beta

Beta feature