சுவிட்சர்லாந்து வங்கியில் தனிநபரால் பட்டப்பகலில் கொள்ளை

சுவிட்சர்லாந்து துர்காவ் மாநிலத்தில் உள்ள ஹார்னில் (Horn) இன்று வியாழக்கிழமை காலை தனிநபர் ஒருவரினால் வங்கிக் கொள்ளை இடம்பெற்றுள்ளதாக, பொலிசார் தெரிவித்துள்ளனர்.

துர்காவ் மாநிலத்தில் உள்ள ஹார்ன் வாங்கியினூள் நுழைந்த கொள்ளையர் ஊழியரை மிரட்டி, பணத்தைத் கொள்ளையிட்டு, ரயில் நிலையத்தை நோக்கி தப்பிச் சென்றுள்ளார். துர்காவ் மாநில பொலிசார் சந்தேக நாரை தேடி வருகின்றனர்.

காலை 11:30 மணியளவில் ஹார்னில் உள்ள பஹ்ன்ஹாஃப்பிளாட்ஸில் (Bahnhofplatz) உள்ள ஒரு வங்கிக் கிளைக்குள் ஒரு நபர் நுழைந்து, ஒரு ஊழியரை வாய்மொழியாக மிரட்டி, பணத்தைக் கோரி கொள்ளையிட்டுக் கொண்டு தப்பி ஓடியுள்ளார். இதன்போது வங்கி ஊழியருக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என தெரியவருகின்றது.

குற்றவாளி அன்னளவாக 170 சென்டிமீட்டர் உயரம் கொண்டவர், வெள்ளை நிற தோலுடன் இருப்பதாக விவரிக்கப்படுகிறது. அவர் பழுப்பு நிற ஜாக்கெட், சாம்பல் நிற பேஸ்பால் தொப்பி மற்றும் கறுப்பு கண்ணாடி அணிந்திருந்திருந்ததோடு, அவர் அரைகுறை ஜெர்மன் மொழியில் அச்சுறுத்தல் விடுத்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.