சுவிட்சர்லாந்தில் வெடி விபத்து சுமார் 40 பேர் உயிரிழப்பு? சுமார் 100 பேர் காயம்?
சுவிட்சர்லாந்தில் வாலிஸ் மாநிலத்தில் இன்று வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வெடி விபத்தில் குறைந்தது 40 பேர் இறந்துள்ளதாக காவல்துறையினரை மேற்கோள்காட்டி புளு நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பிராந்திய நாளிதழான லீ நோவாலிட் (Le Nouvelliste) சுமார் 40 பேர் வரை தீயில் கருகி உயிரிழந்ததாக நம்பப்படுகிறது. 100 க்கு மேற்பட்டோர் காயமடைந்திருக்கலாம் என்றும், இதுவரை இத்தகவல் உறுப்படுத்தப்புடவில்லை எனவும் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் சரியான விபரங்கள் எதுவும் இதுவரை தெரியவரவில்லை. தற்செயலாக இடம்பெற்ற விபத்தா அல்லது நாசகார செயற்பாடுகளின் விளைவா என்பது குறித்து இதுவரை தகவல்கள் எவற்றையும் பொலிசார் வெளியிடவில்லை.
சுவிட்சர்லாந்தின் தென்மேற்கு பகுதியில் உள்ள வாலிஸ் மாநிலத்தில் உள்ள கிரான்ஸ்-மொன்டானாவின் உயர்ரக பனிச்சறுக்கள் விளையாட்டிற்கு பகழ்பெற்ற இடமாக உள்ள ஒரு பாரில் ஏற்பட்ட வெடிப்பு மற்றும் தீ விபத்தில் பலர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று சுவிஸ் பொலிசார் இன்று வியாழக்கிழமை தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் , சில உள்ளூர் ஊடகங்கள் இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று கூறியுள்ளன. ஒரு பொலிஸ் செய்தித் தொடர்பாளர் எண்ணிக்கையை உறுதிப்படுத்த மறுத்துவிட்டார், ஆனால் பலர் தீக்காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருவதாகக் தெரிவித்துள்ளார்.
“லெ கான்ஸ்டெல்லேஷன்” என்ற பாரில் அதிகாலை 1.30 மணிக்கு இந்த வெடிப்பு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குண்டுவெடிப்புக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்றும், வெடிப்பு நடந்த நேரத்தில் 300க்கும் மேற்பட்டோர் பாரில் இருந்ததாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
தென்மேற்கு சுவிட்சர்லாந்தின் மாகாணத்தில் உள்ள பொலிசாரின் தகவல்படி இது பல உயிரிழப்புகளை உறுதிப்படுத்தியுள்ள நிலையில் பலர் காயமடைந்துள்ளனர்.
சுவிஸ் ஊடகங்கள் வெளியிட்ட படங்கள், ஒரு கட்டிடம் தீப்பிடித்து எரிவதையும், சம்பவ இடத்தைச் சுற்றி அவசர சேவைகள் நிறுத்தப்பட்டிருப்பதையும் காட்டியது. கடுமையான புகைகள் மத்தியில் தீயணைப்பு வீரர்கள், காவல்துறை மற்றும் மருத்துவக் குழுக்கள் பணியாற்றுவதைக் காண முடிந்தது.
ஒரு இசை நிகழ்ச்சியின் போது வாணவேடிக்கைகள் பயன்படுத்தப்பட்டபோது தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சுவிஸ் ஊடகங்கள் தெரிவித்தன, ஆனால் அதற்கான காரணம் தெரியவில்லை என்று பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த பகுதிகள் “பொதுமக்களுக்கு முற்றிலும் மூடப்பட்டவை” என்றும், “கிரான்ஸ் மொன்டானா மீது பறக்கத் தடைசெய்யப்பட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது” என்றும் போலீசார் தெரிவித்தனர்.
வெடிப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றும், விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
