சுவிட்சர்லாந்தில் பூச்சிக்கொல்லி எச்சங்கள் காரணமாக பெருஞ்சீரகம் விற்பனையில் இருந்து மீளப்பெறப்பட்டது

சுவிட்சார்லாந்தில் “ஜெய்ம் எண்டர்பிரைசஸ் சக்ரா பிராண்ட்” தயாரிப்பான பெருஞ்சீரகம் பொதிகளை விற்பனையில் இருந்து திரும்பப் பெறுகிறது. இதன் மீதான ஆய்வுகளின் போது குளோர்பைரிஃபோஸ் (chlorpyrifos) என்ற பூச்சிக்கொல்லியின் எச்சங்கள் இவற்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குளோர்பைரிஃபோஸ் எச்சங்கள் காரணமாக ஜெய்ம் எண்டர்பிரைசஸ் ஜிஎம்பிஹெச் சக்ரா பிராண்ட் பொறுப்பான மாநில அமுலாக்க அதிகாரியுடன் இணைந்து குறித்த பெருஞ்சீரகம் விதைகளை திரும்பப் பெறுகிறது.

100 கிராம் (தொகுதி எண் ஏஎல்ஆர்282 (ALR282), காலாவதி திகதி டிசம்பர் 2026) என அடையாளம் இடப்பட்டுள்ள பொதியே மீளப்பெறப்பட்டுள்ளது.

பேசல் (Basel) மாநில ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது 0.030 மி.கிஃகிலோ செறிவில் குளோர்பைரிஃபோஸ் என்ற பூச்சிக்கொல்லியின் எச்சங்களைக் கண்டறிந்தது.

குறித்த திகதி இடப்பட்ட பொதியினை கொள்பனவு செய்துள்ள நுகர்வோர் உடனடியாக பயன்பாட்டை நிறுத்திவிட்டு பாதிக்கப்பட்ட தயாரிப்பை வாங்கிய இடத்திற்குத் திருப்பி கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

குறித்த சிரமத்திற்கு நிறுவனம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது.