
சுவிட்சர்லாந்தில் சிறிய தீவில் சிக்கிய : தந்தை மகன் நாய் மீட்பு
சுவிட்சர்லாந்தின் ஃப்ரிபோர்க்கில் உள்ள போயிஸ்-டெஸ்-மோர்ட்ஸ் பாதைக்கு அருகிலுள்ள சானே நதியில் நடுவே உள்ள ஒரு சிறிய தீவில் சிக்கிய 45 வயது நபரும் அவரது பத்து வயது மகன் மற்றும் நாயும் புதன்கிழமை இரவு பொலிசாரினால் மீட்கப்பட்டனர்.
மலைப் பகுதிகளில் வெப்பநிலை காரணமாக பனி உருகுவதை அடுத்து திடீரென நதியின் நீர்மட்டம் உயர்ந்ததையடுத்து இந்த அனார்த்தம் இடம்பெற்றுள்ளது.
புதன்கிழமை இரவு சுமார் 8:30 மணியளவில்இ ஃப்ரீபர்க்கில் உள்ள சானே நதியில் இருந்து அவசர சேவைகளுக்கு அழைக்கப்பு விடுக்கப்பட்டது. 45 வயது தந்தையும் அவரது 10 வயது மகனும் தங்கள் நாயுடன் மீன்பிடிக்கச் சென்று சானே ஆற்றின் நடுவில் உள்ள ஒரு தீவில் சிக்கிக்கொண்டனர்.
நதியின் நீர் மட்டம் உயர்ந்து நீரோட்டம் மிகவும் வலுவாகிவிட்டதால் அவர்களால் கரைக்குத் திரும்ப முடியாமல் போய்விட்டது.
கடல்சார் பொலிஸ் குழு ஒன்று சம்பவ இடத்திற்குச் சென்று நாயும் இரண்டு பேரும் படகில் பாதுகாப்பாக கரைக்குக் கொண்டு வரப்பட்டனர்.