சுவிட்சர்லாந்தில் கோப்பி மற்றும் உணவுகளின் விலை அதிகரிக்கப்படும்
சுவிட்சர்லாந்தில் எதிர்வரும் மாதங்களில் கஃபே (கோப்பி) மற்றும் உணவகங்களில் விற்பனை செய்யப்படும் நாளாந்த உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படும் என, சூரிச் பொருளாதார ஆராய்ச்சி மையத்தின் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
உணவகங்கள் மற்றும் சிற்றூண்டிச்சாலைகள் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு அடுத்த மூன்று மாதங்களில் அவற்றின் விலைகளை கணிசமாக அதிகரிக்க விரும்புகின்றன.
இது தொடர்பாக கடந்த அக்டோபர் மாதம் இடம்பெற்ற கணக்கெடுப்பில் 4,500 நிறுவனங்கள் பங்கேற்றன. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், “விலை உயர்வுகளில் மகத்தான அதிகரிப்பு” உள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு, இந்த நிறுவனங்களில் 18 சதவிகிதமானவர்கள் மட்டுமே விலைகளை உயர்த்த விரும்பின, ஆனால் தற்போது 63.8 சதவிகிதமானவர்கள் இந்த அதிகரிப்பை வலியுறுத்துகின்றனர்.
கஃபே முதல் பிரஞ்சு பொரியல் (Pommes frittes) வரை எல்லா விலைகளும் நாளாந்தம் உயர்ந்து வருகின்றது. ஏதிர்வரும் மாதங்களில் சராசரியாக 5 முதல் 10 சதவிகிதம் வரை விலை அதிகரிப்புடன் அவற்றின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளது.
எதிர்காலத்தில் ஒரு கஃபே க்ரீமுக்கு (பால்கோப்பி) 30 முதல் 40 ராப்பனுகள் (சதங்கள்) வரை அதிகமாகச் செலுத்த வேண்டியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது , இருப்பினும் சமீபத்திய கணக்கெடுப்பில் சராசரியாக கஃபே க்ரீம் ஒன்றுக்கு 4.30 பிராங்குகள் செலவாகும்.