சுவிட்சர்லாந்தின் மக்கள் தொகை ஒன்பது மில்லியனாக உயர்ந்துள்ளது

சுவிட்சர்லாந்தின் மக்கள் தொகை எட்டிலிருந்து ஒன்பது மில்லியனாக உயர்ந்துள்ளதாகவும் , ஒரு மில்லியன் வரை உயர்வதற்கு 12 ஆண்டுகள் ஆனது((2012 முதல் 2024 வரை) , அதே நேரத்தில் ஐந்திலிருந்து ஆறு மில்லியனாக அதிகரிக்க 12 ஆண்டுகள் (1955-1967) எடுத்ததுள்ளது எனவும் தரவுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த தரவுகளின் அடிப்படையில் நிரந்தரமாக வசிப்பவர்களில் 6,560,361 பேர் சுவிஸ் நாட்டவர்கள் என்றும்; 2,442,402 பேர் வெளிநாட்டினர் எனவும் தெரியவருகின்றது.

இந்த தரவுகளின் அடிப்படையில் சுமார் 5.460 மில்லியன் மக்கள் 20 மற்றும் 64 வயதுக்கு இடைப்பட்டவர்கள். குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் கிட்டத்தட்ட 1.790 மில்லியன். 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களின் எண்ணிக்கை 1.753 மில்லியன் எனவும் தெரியவருகின்றது

பெர்ன், ஃப்ரிபர்க், சோலோதூர்ன், நியூசெட்டல் மற்றும் ஜூரா ஆகிய மாநிலங்கள் உள்ளடக்கிய மத்திய பகுதியில் கிட்டத்தட்ட 1.954 மில்லியன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஜெனீவா , வாட், வலாய்ஸ் மற்றும் ஜெனிவா மாகாணங்களுடன், இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 1.745 மில்லியனாக இருக்கின்றது. 1.231 மில்லியன் மக்கள் வடமேற்கு சுவிஸ் மாநிலங்களில் வாழந்து வருவதும் கணக்கிடப்பட்டுள்ளது.

ஜூன் 2023 இன் இறுதியில், சுவிட்சர்லாந்தில் முதன்முறையாக ஒன்பது மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசித்து வசித்து வருவது கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையில் புகலிடக் கோரிக்கையாளர்கள் போன்ற நிரந்தரமற்ற வெளிநாட்டவர்களும் அடங்குவர்.