“சுவாபிமானி” தேசிய விருது வழங்கல் நிகழ்வு

மகளிர்,சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சின் கீழான சமூக சேவைகள் திணைக்களத்தினால் 2020,2021ம் ஆண்டுக்கான “சுவாபிமானி” தேசிய விருது வழங்கல் வைபவம் ஆகஸ்ட் 3ம் திகதி களுத்துறை மாவட்ட செயலகத்தில் சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் அனோஜா கேரத் தலைமையில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் மகளிர்,சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சின் இராஜங்க அமைச்சர் அனுப பஸ்குவால் அமைச்சின் செயலாளர் யமுனா பெரேரா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் சிறந்த மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தருக்கான விருதினை தேசிய மட்டத்தில், முதலாம் இடத்தினை திருகோணமலை மாவட்டத்தினைச் சேர்ந்த திருமதி ஜிவிதன் சுகந்தினி பெற்றுக்கொண்டார்.

இவர் 2019ம் ஆண்டு இடம்பெற்ற தேசிய விருதில் இரண்டாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. அது மட்டுமன்றி அன்னை தெரேசா,கல்கி கண்ட புதுமைப் பெண்,பெண் சாதனையாளர் (இந்தியா), தேசமான்ய போன்ற விருதுகளையும் இவர் பெற்றுள்ளதுடன், 2022 ஐூலை பதவியுயர்வு பெற்று சமூக சேவைகள் திணைக்களத்தின் கிழக்கு மாகாணத்திற்கான தொழிற் பயிற்சி நிலையத்திற்கான பொறுப்பதிகாரியாக கடமையாற்றுகின்றார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்