
சுவாசிக்க சிரமப்பட்ட இளம் குடும்ப பெண் உயிரிழப்பு!
-யாழ் நிருபர்-
மூச்செடுக்க சிரமப்பட்ட இளம் குடும்பப் பெண் ஒருவர், நேற்று சனிக்கிழமை, யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி – அம்பாள்குளம் பகுதியை சேர்ந்த, அஜித்குமார் ரவீணா (வயது 23) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் கடந்த 31 ஆம் திகதி சுவாசிக்க சிரமப்பட்ட நிலையில், 1 ஆம் திகதி காலை கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அதன்பின்னர், 3 ஆம் திகதி மேலதிக சிகிச்சைக்காக, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இருப்பினும், குறித்த பெண் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
சடலம் மீதான மரண விசாரணைகளை, திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
