சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு
இந்த மாதத்தின் முதல் 9 நாள்களில் 46ஆயிரத்து 868 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைத் தந்துள்ளனர்.
அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகைத் தந்துள்ளனர் எனவும், இக்காலப் பகுதியில் 14ஆயிரத்து 221 சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகைத் தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதேநேரம் இக்காலக் கட்டத்தில் சீனா, பிரித்தானியா, ஜேர்மன் , பங்களாதேஷ் மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து அதிக சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைத் தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆண்டு இதுவரை நாட்டுக்கு 1,772,362 சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.