சீரகத் தண்ணீர் பயன்கள்
🟧பொதுவாக நம்முடைய சமையல் அறையில் இருக்கும் பல மசாலா பொருட்கள் நாம் விரும்பி சாப்பிடும் பல உணவுகளின் சுவையை அதிகரிக்க செய்வதோடு, எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளையும் நமக்கு அளிக்கின்றன. அத்தகைய மசாலா பொருட்களில் ஒன்று தான் சீரகம், இது எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.
🟧உணவுகளில் சீரகத்தை பயன்படுத்துவதை விட, சூடு தண்ணீரில் இதனை சேர்த்து பயன்படுத்துவதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் அதிகம். அதிலும், குறிப்பாக காலை நேரத்தில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான சுடு தண்ணீரில் சீரகத்தை சேர்த்து குடிப்பது ஏராளமான பலன்களை அளிக்கிறது. வெதுவெதுப்பான சீரக தண்ணீரைக் குடிப்பதனால் கிடைக்க கூடிய பயனுள்ள நன்மைகளை பற்றி பார்ப்போம்.
💢சீரக தண்ணீரில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்கள் நிறைந்துள்ளன, அவை நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. இந்த சீரக தண்ணீரை தொடர்ந்து குடித்து வந்தால், குறிப்பாக பருவகால நோய்களில் இருந்து தப்பிக்கலாம்.
💢சீரக தண்ணீரை தொடர்ந்து குடித்து வந்தால், உடலின் இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது, மேலும், இது நீரிழிவு அபாயத்தை குறைக்கிறது.
💢சீரக தண்ணீரில் அயன் மற்றும் வைட்டமின்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது, இது மயிர்க்கால்களை வலுப்படுத்தி, ஒட்டுமொத்த முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
💢 தினமும் சீரக தண்ணீரைக் குடித்து வந்தால் நம்முடைய செரிமான மண்டலம் பலமாகும். சீராக தண்ணீர் செரிமான அமைப்பை மேம்படுத்துவதோடு வயிற்று வலி, வீக்கம், வாயு, அஜீரணம் உள்ளிட்ட சிக்கல்களில் இருந்து நிவாரணம் அளிக்கும். இதை தினமும் குடிப்பதால் வயிறு நன்கு சுத்தமாகும்.
💢சீரக தண்ணீர் தேவையற்ற பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. சீரக தண்ணீரை தொடர்ந்து குடித்து வந்தால் எடை குறைப்புக்கு உதவுகிறது.
💢சீரக தண்ணீர் குடல் இயக்கத்தை மேம்படுத்தி, வீக்கத்தைக் குறைப்பதன் மூலம் மலச்சிக்கலையும் போக்குகிறது.
💢தினமும் சீரக தண்ணீரைக் குடித்து வந்தால் உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. சீரகத்தில் உள்ள ஃபென்சோன் உள்ளிட்ட மூலப்பொருள்கள், உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கச் செய்து, உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகளை எரிக்க உதவி செய்யும். இது உடலின் எடையை சமநிலைப்படுத்த உதவுகிறது.
💢சீரக தண்ணீரில் ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், உங்கள் சருமத்தின் பொலிவை மீட்டெடுக்கவும், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
💢சீரக தண்ணீரில் ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகள் கொண்டுள்ளதால், உடலில் உள்ள நச்சுகளை நீக்க உதவுகிறது,
சீரகத் தண்ணீர் பயன்கள்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்