சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டார் அமைச்சர் அலி சப்ரி

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டு சீனாவிற்கு செல்லவுள்ளார்.

சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான குயின் கேங்கின் அழைப்பின் பேரில், எதிர்வரும் 24 முதல் 30ம் திகதி வரையில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ள உள்ளார் என இலங்கைக்கான சீனத் தூதரகம் தமது டுவிட்டர் பதிவில் அறிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்