சீனாவின் கண்டுபிடிப்புக்களில் வெற்றி

சீனா கடந்த 2025 ஆம் ஆண்டில் புதிய கண்டுபிடிப்புகளுக்காக 5.32 மில்லியன் காப்புரிமைகளைப் பெற்றுள்ளதாக அந்நாட்டின் தேசிய அறிவுசார் சொத்துரிமை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 972,000 புதிய கண்டுபிடிப்பு காப்புரிமைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

மேலும், காப்புரிமை விண்ணப்பங்களைச் பரிசீலிக்கும் காலம் 15 மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

அதிக மதிப்புமிக்க புதிய கண்டுபிடிப்புகளின் சராசரி உரிமையாளர் விகிதமானது, ஒவ்வொரு 10,000 பேருக்கும் 16 காப்புரிமைகள் என்ற அளவில் உயர்ந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகின் தலைசிறந்த 5,000 உலகளாவிய வர்த்தக முத்திரைகளில், சீனாவின் வர்த்தக முத்திரைகளின் மதிப்பு 1.81 டிரில்லியன் அமெரிக்க டொலராகும்.

இந்த மதிப்பின் அடிப்படையில் சீனா உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளதாக தேசிய அறிவுசார் சொத்துரிமை நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.