சிவபூதநாத ஈஸ்வர ஆலய பால்குடப்பவனி
யாழ்ப்பாணம் உரும்பராய் கிழக்கு , கரந்தன், நீர்வேலி எல்லைப் பகுதியில் வீற்றிருந்து அருள் பாலிக்கின்ற மனோன்மணி அம்பாள் சமேத சிவ பூதநாத ஈஸ்வர ஆலய பால்குடப்பவனி நேற்று செவ்வாய்க்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.
உரும்பிராய் கிழக்கு காளியம்மாள் ஆலயத்தில் இருந்து காலை 7.00 மணிக்கு பாற்குடப்பவனி ஆரம்பமாகி சிவ பூதநாதேஸ்வரர் ஆலயத்தை சென்றடைந்தது.
குறித்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் நிறைவுற்று அதன்பின் இடம்பெற்ற 45 நாள் மண்டல அபிஷேகத்தின் இறுதி நாளான நேற்று 1008 சங்குகளால் சங்காபிஷேகம் இடம்பெற்ற இந்நாளில் சிவபெருமானுக்கு அடியவர்களால் பாற்குடப்பவனி நேர்த்தியுடன் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.