
சிவனொளிபாத மலைக்கு நடைபயணமாக செல்லும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்
-மஸ்கெலியா நிருபர்-
கண்டி தலாத்தோயா ஸ்ரீ இசிபத்தாரம விகாரையில் இருந்து, இளைப்பாறிய இராணுவ வீரர் பி.ஜீ. ஸ்ரீ தர்மதிலக்க என்பவர், சிவனொளிபாத மலைக்கு நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
கடந்த 22 ஆம் திகதி காலை 6.35 மணிக்கு ஆரம்பமாகிய அவரது நடைப்பயணம், தலாத்தோயா, மஹாவங்குவ, மொரகொல்ல, கலஹா, தொலுவ, கம்பளை விகாரையில் தங்கி, மறுநாள் 23 ம் திகதி நாவலப்பிட்டி, கினிகத்தேன விகாரையில் தங்கி, 24 ம் திகதி கினிகத்தேனையில் இருந்து நோட்டன் ஸ்ரீ சுமனாராம விகாரையில் தங்கி, 25 ம் திகதி நோட்டன் ஸ்ரீ சுமனாராம விகாரையில் இருந்து மவுஸ்சாகலை சந்தி வழியாக, நல்லதண்ணி நாகதீப விகாரையை சென்றடைந்தது, 26 ஆம் காலை சிவனொளிபாத மலைக்கு சென்று அங்கு தரிசனம் செய்ய உள்ளார்.
