
சிவகார்த்திகேயன் பயணித்த கார் விபத்து – ரசிகர்களுக்கு அதிர்ச்சி
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் பயணித்த சிற்றூந்து, சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் இன்று வியாழக்கிழமை விபத்துக்குள்ளானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து காவல்துறையினர், இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் பாதுகாப்பாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படம் எதிர்வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ள நிலையில், இந்தச் சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
