சிறையில் இருந்து வெளியே வந்தவர் சகோதரனுடன் இணைந்து தாக்குதல் – இருவரும் பொலிசாரால் கைது
-யாழ் நிருபர்-
வாளுடன் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் வெள்ளிக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் சகோதரனுடன் இணைந்து மீண்டும் ஒரு வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட நிலையில் இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலிகோவில் பகுதியில் இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
நீண்ட காலமாக இருந்துவந்த காணி தகராறு காரணமாகவே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கூரிய ஆயுதத்தால் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்த நபர் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தாக்குதல் நடத்திய இருவரையும் வட்டுக்கோட்டை பொலிசார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.