சிறுவர்கள் மனநல மருத்துவரின் கீழ் சிகிச்சை
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இலக்கு வைத்து பிள்ளைகள் மீது பெற்றோர்கள் பிரயோகித்த அழுத்தத்தினால் 13 மாணவர்கள் தற்போது மனநல மருத்துவரின் கீழ் சிகிச்சை பெற்று வருவதாக, பெண்கள் மற்றும் சிறுவர் பொலிஸ் பிரிவின் பரிசோதகர் மனோஜ் சமரசேகர தெரிவித்துள்ளார்.
156வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு சிறுவர் பாதுகாப்பு மற்றும் பெற்றோரின் பொறுப்பு என்ற தொனிப்பொருளில், கொழும்பு – டி.எஸ். சேனநாயக்க வித்தியாலயத்தில், நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.