சிறுவர்களை கடத்த முயன்றவர் கையும்களவுமாக மக்களால் பிடிபட்டார்

யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் சிறுவர்களை கடத்த முயன்றார் என அப்பகுதி மக்களால் நபர் ஒருவர் பிடிக்கப்பட்டு , யாழ்ப்பாண பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

நாவாந்துறை பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை குறித்த சந்தேக நபர் மக்களால் பிடிக்கப்பட்டார்.

சந்தேக நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்