சிறுவர் அபிவிருத்தி குழுவின் இரண்டாம் காலாண்டுக் குழுக்கூட்டம்

யாழ்ப்பாண மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுவின் இரண்டாம் காலாண்டு குழுக் கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது சிறுவர் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் முறைப்பாடுகள் பிரதேச செயலக மட்டத்தில் ஆராயப்பட்டு தீர்க்கப்படுவதுடன், தீர்க்க முடியாத பிரச்சனைகளை மாவட்ட மட்டத்தில் ஒருங்கிணைந்து தீர்ப்பதே இக் கூட்டத்தின் நோக்கம் எனத் தெரிவித்தார்.

அத்துடன், மாணவர் இடைவிலகல் தொடர்பாக இடைவிலகிய மாணவர்களின் குடும்பச் சூழல் பொருளாதார சூழல் காரணிகளை கிராம மட்ட உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.