சிறப்பு அதிரடி படை உத்தியோகத்தர் போலீசாரால் கைது
கிளிநொச்சி மாவட்டத்தில் கடமையாற்றி வந்த சிறப்பு அதிரடி படையை உத்தியோத்தர் ஒருவர் சக சிறப்பு அதிரடிப்படை உத்தியோகத்தரின் தொலைபேயை பயன்படுத்தி நூதன முறையில் ஒரு லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் பணத்தை நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் கிளிநொச்சி போலீசாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக நேற்று சிறப்பு அதிரடிப்படை சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சிறப்பு அதிரடிப்படை உத்தியோகத்தர் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளநொச்சி போலீசார் தெரிவித்துள்ளனர்.