சியா விதை நன்மைகள்
⚫நம் உடலுக்கு பல அதிசய நன்மைகளை செய்யும் பண்புகளுக்காக சியா விதைகள் மக்கள் மத்தியில் மிகப்பிரபலமாக உள்ளன. சியா விதைகள் ஃபைபர் சத்து, ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ் மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்ஸ் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்களை கொண்ட சிறிய பவர்ஹவுஸ் ஆகும்.
⚫ஆரோக்கியமான உணவின் ஒரு பகுதியாக இதை சேர்த்து கொள்ளலாம் என்பதால் இது ஒரு சூப்பர்ஃபுட்டாகவும் கருதப்படுகிறது. இந்த சிறிய விதைகள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, ஆற்றலை அதிகரிக்கிறது மற்றும் உடல் எடை மேலாண்மைக்கும் உதவுகின்றன. சியா விதைகளை உங்கள் டயட்டில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் சில முக்கிய நன்மைகள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
🔺ஊட்டச்சத்து மிக்க சூப்பர்ஃபுட்டாக குறிப்பிடப்படும் சியா விதைகள் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே குறிப்பிடப்படி இதிலிருக்கும் நார்ச்சத்து, புரதச் சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்தும் மினரல்ஸ்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ்கள் உடல் எடையைக் கட்டுப்படுத்த, செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. மேலும் இந்த விதைகள் நீரிழிவு நோயாளிகளின் டயட்டில் சேர்த்து கொள்ள கூடியதாகவும் இருக்கின்றன.
🔺டயட்ரி ஃபைபரின் சிறந்த மூலமாக சியா விதைகள் உள்ளன. ஒரு அவுன்ஸ் சியா விதைகள் கிட்டத்தட்ட 10 கிராம் டயட்ரி ஃபைபரை நமக்கு வழங்குகிறது. ஃபைபர் சத்து போதுமான அளவு எடுத்து கொள்வது செரிமான ஆரோக்கியத்தை சிறப்பாக வைப்பதோடு மற்றும் உடல் எடையைக் கட்டுக்குள் வைப்பதற்கு கணிசமாக உதவுகிறது. தவிர ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் ஃபைபர் அதாவது நார்ச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே நீரிழிவு நோயை நிர்வகிப்பவர்களுக்கு சியா விதைகள் நன்மை அளிக்கிறது.
🔺அளவில் சிரியதாக இருந்தாலும் கூட சியா விதைகளில் வியக்கத்தக்க அளவில் ப்ரோட்டீன் காணப்படுகிறது. தவிர இந்த சிறிய விதைகளில் நம் உடலுக்குத் தேவையான 9 அத்தியாவசிய அமினோ ஆசிட்களும் உள்ளன. இதன் காரணமாக சைவ உணவு சாப்பிடுபவர்கள் மற்றும் வீகன் உணவு முறையை பின்பற்றுபவர்களுக்கு சிறந்த ப்ரோட்டீன் சோர்ஸாக சியா விதைகள் இருக்கின்றன. தசைகளை சரி செய்ய, நோயெதிர்ப்பு மண்டலத்தின் சிறப்பான செயல்பாடு மற்றும் சருமம், முடி மற்றும் நகங்களை ஆரோக்கியமாக பராமரிப்பதற்கு ப்ரோட்டீன் அவசியம்.
🔺அதே போல சியா விதைகள் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்ஸ்களின் குறிப்பாக ஆல்பா-லினோலெனிக் ஆசிட்டின் (ALA).சிறந்த தாவர அடிப்படையிலான ஆதாரங்களில் ஒன்றாகும். இந்த ஆரோக்கிய கொழுப்புகள் கெட்ட கொலஸ்ட்ரால் லெவல் மற்றும் அதிகரித்து காணப்படும் ரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றன. இதன் மூலம் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கின்றன.
🔺சியா விதைகளில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளிட்ட பல மைக்ரோ நியூட்ரியன்ட்ஸ் நிரம்பிய உள்ளன. எனவே இந்த விதைகள் எலும்புகள் மற்றும் பற்களை வலுவாக வைத்திருக்க உதவுகின்றன, ஒரு அவுன்ஸ் சியா விதைகளில் தினசரி உட்கொள்ள பரிந்துரைக்கப்பட்ட கால்சியத்தில் 18% உள்ளது. எனவே லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் அல்லது தாவர அடிப்படையிலான உணவுகளை உட்கொள்பவர்களுக்கான கால்சியம் ஆதாரமாக சியா விதைகள் இருக்கிறது.
🔺முன்பே குறிப்பிட்டபடி ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்கள் இந்த சிறிய விதைகளில் நிறைந்துள்ளன. இது உயிரணுக்களை சேதப்படுத்தும் மற்றும் வயதாகும் செயல்முறை மற்றும் கேன்சர் போன்ற நோய்களுக்கு பங்களிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களிடமிருந்து உடலை பாதுகாக்க உதவுகிறது. சியா விதைகளில் காணப்படும் நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளின் கலவை சரியான ரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்த உதவும். எனவே இது டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை அளிக்கிறது. சியா விதைகள் கார்போஹைட்ரேட்ஸ்களை சர்க்கரையாக மாற்றுவதை மெதுவாக்குகிறது, இது உணவு சாப்பிட்ட பிறகு ரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பதை தடுக்கிறது.
சியா விதை நன்மைகள்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்