சிகிச்சைக்காக மருத்துவ நிலையம் சென்ற பெண் வன்புணர்வு!
சியம்பலாபே பிரதேசத்தில் தனியார் மருத்துவ நிலையமொன்றில் சிகிச்சை பெற வந்த பெண்ணை வன்புணர்வு செய்ததாகக் கூறப்படும் வைத்தியரைக் கைது செய்ய பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்புப் பணியகம் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட 42 வயதுடைய பெண் அளித்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் பெண் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்