சிகரெட்டு கடத்திய பெண் கைது
கொழும்பு – கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், ஒரு தொகுதி சிகரெட் கடத்த முயன்ற குற்றச்சாட்டின் பேரில், டுபாயில் இருந்து வந்த இலங்கை பெண் ஒருவரை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பொதிகளில் அடைக்கப்பட்ட நிலையில் 17,000 சிகரெட் மீட்கப்பட்ட நிலையில் இதன் இலங்கை பெறுமதி 1.7 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
புத்தளத்தைச் சேர்ந்த 55 வயதுடைய பெண் ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.