சாய்ந்தமருதில் வீதிகள் புனர் நிர்மாண வேலைகளுக்காக அங்குரார்ப்பணம் செய்து வைப்பு
-அம்பாறை நிருபர்-
கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூகவலுவூட்டல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவின் வேண்டுகோளுக்கிணங்க சாய்ந்தமருது பிரதேசத்தில் சாய்ந்தமருது ஆலிம் வீதி, நூலக வீதி, தாமரை வீதி, வீ.எச். வீதி, வைத்தியசாலை 4 ஆம் குறுக்கு வீதி ஆகிய வீதிகள் புனர்நிர்மாணம் செய்வதற்காக அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை சாய்ந்தமருதில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில், அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இவ்வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வுகளில், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக், உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ. முஆபிகா, சாய்ந்தமருது பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஏ. ஹமீட், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேகச் செயலாளர் எம். இம்தியாஸ், இணைப்புச்செயலாளர் ஆசிரியர் எஸ்.எம். ஆரிப் உட்பட தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகள், தேசிய மக்கள் சக்தியின் செயற்பட்டாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.