சாகசத்தில் ஈடுபட்ட விமானம் விபத்து – விமானி பலி

டுபாயில் இடம்பெற்ற விமான கண்காட்சியின் போது வானில் பறந்துக்கொண்டிருந்த இந்திய போர் விமானம் கீழே வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வானில் சாகசம் செய்து கொண்டிருந்தபோது விமானம் கீழே வீழ்ந்து , வெடித்து சிதறி தீப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விமான கண்காட்சியின் போது தேஜஸ் விமானத்தை இயக்கிய விமானி உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அறிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த விமானம் கீழே வீழ்ந்து தீப்பிடித்ததால் அதனை இயக்கிய விமானி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் விமானப்படை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.