சர்வதேச ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி

சுற்றுலா தென்னாபிரிக்க அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையில் நேற்று லோட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டியில், தென்னாபிரிக்க அணி 5 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி தமது 50 ஓவர்களில் 8 விக்கட் இழப்புக்கு 330 ஓட்டங்களை பெற்றது. மெத்திவ் ப்ரீட்கே 85 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக்கொடுத்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 325 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இங்கிலாந்து அணியின் சார்பில் ஜோ ரூட் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் தலா 61 ஒட்டங்களை பெற்றுக் கொடுத்தனர்