சருமத்தை வெண்மையாக்கும் முகப்பூச்சுகள்: மக்களுக்கு எச்சரிக்கை!

இணையங்களில் விற்கப்படும் சருமத்தை வெண்மையாக்கும் முகப்பூச்சுக்கள் மற்றும் பிற பொருட்கள் குறித்து பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு தோல் மருத்துவர் இந்திரா கஹவிட்ட கோரியுள்ளார்.

ஊடக சந்திப்பொன்றில் உரையாற்றிய அவர், சருமத்தை வெண்மையாக்கும் பொருட்கள் நூற்றுக்கணக்கான பல்வேறு இணையதளங்களில் கிடைக்கின்றனஇ இவற்றை பயன்படுத்திய பிறகு ஒரே இரவில் தங்கள் சருமம் அழகாக மாறும் என்று மக்கள் ஏமாற்றப்படுகின்றனர்.

அத்துடன் அவ்வாறான பொருட்கள் மற்றும் தயாரிப்புகள் இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளனவா போன்ற விடயங்களை ஆராயுமாறு மருத்துவர் கஹவிட்ட வலியுறுத்தியுள்ளார்.

மேலும் தோல் மருத்துவர் என்ற ரீதியில் ஒரே இரவில் சருமத்தை அழகாக மாற்றும் எந்தவொரு பொருளையும் தாம் பரிந்துரைக்கவில்லை என்பதுடன் தமது தோலில் ஏதேனும் மாற்றங்களைச் செய்ய விரும்பினால், அது படிப்படியாகவும் முறையாகவும் செய்யப்பட வேண்டும் என்றும் தோல் மருத்துவர் இந்திரா கஹவிட்ட குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்