சம்மாந்துறையில் கேஸ் சிலிண்டர் திருட்டு!
-சம்மாந்துறை நிருபர்-
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் , நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.45 மணியளவில், கேஸ் சிலிண்டர் திருடிய சந்தேக நபரை, பொதுமக்கள் பிடித்து சம்மாந்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர், சென்னல் கிராமம் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவர் என பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்