சம்மாந்துறை பொலிஸ் நிலைய சிறு குற்றப்பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் ஹமீட் சேவையில் இருந்து ஓய்வு!

-சம்மாந்துறை நிருபர்-

 

35 வருடங்களுக்கு மேலாக பொலிஸ் திணைக்களத்தில் சேவையாற்றிய, சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் சிறு குற்றப்பிரிவு உப பொலிஸ் பரிசோதகர், ஹமீட் கடந்த .20 ஆம் திகதியுடன் ஓய்வு பெற்றுள்ளார்.

இவர் பாலமுனையை பிறப்பிடமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த உப பொலிஸ் பரிசோதகரின் ஓய்வு என்பது பல பொலிஸ் அதிகாரிகளிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இவருடைய ஓய்வுக் காலம், மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் அமைய வேண்டும் என அனைவரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.