சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு மூன்று சீலிங் மின்விசிறிகள் அன்பளிப்பு!
-சம்மாந்துறை நிருபர்-
சமூக நலனுக்காக பங்களித்து வரும் ரீஷா சதகா அமைப்பினால், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு தேவையான மூன்று சீலிங் மின்விசிறிகள் (Ceiling Fans) நேற்று புதன்கிழமை அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
தற்காலத்தில் அதிகரித்து வரும் வெப்பம் காரணமாகவும், காற்றோட்டம் இன்மையாலும் நோயாளிகள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
இதன் போது, வைத்தியசாலை நிர்வாகத்தினர் இவ்வமைப்பின் அன்பளிப்பை ஏற்றுக் கொண்டதுடன், ரீஷா சதகா அமைப்பின் சமூகப் பொறுப்புணர்வை பாராட்டி கௌரவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.