
சம்மந்தமில்லாத சிலர் தோட்ட நிர்வாகம் பற்றி பொய்யான தகவல்களை பரப்புவதாக குற்றச்சாட்டு!
நாவலப்பிட்டி தொலஸ்பாக பகுதியில் அமைந்துள்ள ராக்சாவ தோட்ட நிர்வாகம் தொடர்பில் குறித்த தோட்டத்தில் வேலை செய்யாத வெளியில் இருந்து வந்த சிலரால் உண்மைக்கு புறம்பான தகவல்கள் ஊடகங்கள் வாயிலாக பரப்பப்பட்டள்ளதாக தோட்ட உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தோட்ட உரிமையாளர் தெரிவிக்கையில்
கடந்த 27 ம் திகதி ஏற்பட்ட பேரிடரால் இத்தோட்டத்தில் எவ்விதமான மண்சரிவோ அபாயமோ நடக்கவில்லை
ஆனாலும் சீரற்ற காலநிலையால் அங்கிருக்கும் 11 குடும்பங்களின் நலன் கருதி பாதுகாப்பிக்காக தேயிலைத்தொழிற்சாலைக்கு அருகில் உள்ள மண்டபத்தில் அந்த மக்கள் தோட்ட நிருவாகத்தால் தங்க வைக்கப்பட்டனர்
அன்றிலிருந்து அவர்களுக்கு போதிய அளவு உலர் உணவுப் பொருட்கள், உடைகள், பாடசாலை உபகரணங்கள் என்பன அளவுக்கதிகமாகவே கிடைக்கப் பெற்றுள்ளன
அதனை அவர்கள் சேதமாகியதாக குறிப்பிடும் வீடுகளுக்கு கொண்டுபோய் வைத்துள்ளனர்
எதிர்வரும் 5-6 மாதங்களுக்கான உணவுப் பொருட்கள் உட்பட தேவையான பொருட்கள் அவர்களுக்கு நன்கொடையாக கிடைக்கப்பெற்றுள்ளன
அதற்கான ஆதாரங்களாக அங்கிருக்கும் சிசிரீவி பதிவு வீடியோக்களும், புகைப்படங்களும் உள்ளன, அத்துடன் தோட்ட நிருவாகத்தின் சார்பில் பதிவு செய்யப்பட்ட புத்தகங்களிலும் பதிவாகியுள்ளன
தோட்ட நிறுவாகத்திற்கு எதிராக சிலரால் வெளியிடப்பட்டுள்ள வீடியோக்களில், வீட்டு வசதிகளைப்பற்றி பொய்யான உண்மைக்குப் புறம்பான காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
குறித்த வீடியோக்கள் மற்றும் செய்திகளில் காட்டப்பட்ட வீடுகள் ஏற்கனவே கைவிடப்பட்ட பழைய வீடுகளாகும்
இவ்வாறு பொய் தகவல்கள் கொடுக்கும் இந்த மக்களுக்கு ஏற்கனவே சிறந்த வீட்டு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன இதை யாரும் நேரடியாக வந்து பார்ப்பின் தோட்ட நிருவாகம் உறுதி செய்யும்
புதிதாக காணியை பெற்றுக்கொளளும் நோக்கில் சிலர் இவ்வாறான பொய்யான தகவல்களை பரப்பி குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள் இ அத்துடன் இங்கு பணியாற்றும் தொழிலாளர்களையும் வேலைக்கு வர விடாமல் தடுத்து வைத்திருக்கிறார்கள்
இந்த தோட்டத்தில் வசிக்காத சிலர் பேரிடரை பயன்படுத்தி காணிகளைப்பெற முயற்சிப்பதுடன் நிருவகத்துக்கெதிரான பொய் தகவல்களை பரப்புகின்றனர், என தெரிவித்தார்
