சம்பள உயர்வு கோரி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய பெருந்தோட்ட தொழிலாளர்கள்

-மஸ்கெலியா நிருபர்-

பெருந்தோட்ட தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோரி நாட்டின் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

பெருந்தோட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு நாளாந்தம் ஆக குறைந்தது சம்பளமாக தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திடமிருந்து 2000 ரூபா பெற்று தர வேண்டும் என கோரிக்கை முன் வைத்து, மஸ்கெலியா அஞ்சலகத்திலும் கொட்டகலை அஞ்சலகத்திலும் இருந்து இன்று புதன்கிழமை  முற்பகல் 12 மணியளவில்,  ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு , தபால் அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டது.

தபால் அட்டைகள் அனுப்பிய பின்னர் ஊடகங்களுக்கு பெருந்தோட்ட தொழிலாளர்கள் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த 202 ஆண்டுகளாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் எங்களது வேதனத்தை போராடிய பெற்று வந்து உள்ளோம், இம் முறை நாட்டின்   ஜனாதிபதி  முன் வந்து பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனத்தை முதலாளிமார் சம்மேளனத்திடமிருந்து ஆக குறைந்த சம்பளமாக 2000 ரூபா  பெற்று கொடுக்க வேண்டும்,  என கோரிக்கை முன் வைத்துள்ளனர்.