சமூகப் பாதுகாப்பு சபை வரலாற்றில் மிக உயர்ந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளது

அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை உருவாக்கி பராமரிக்கும் நோக்கத்துடன் 30 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட இலங்கை சமூகப் பாதுகாப்பு சபை, 2025 ஆம் ஆண்டில் அதன் வரலாற்றில் மிக உயர்ந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்று கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது.
2024 இல் ரூ. 167.41 மில்லியனில் இருந்த புதிய ஆட்சேர்ப்புகளின் மதிப்பு, 2025 இல் ரூ. 318.68 மில்லியனாக தொண்ணூற்று மூன்று சதவீதமாக அதிகரித்துள்ளது.
ஆட்சேர்ப்பு மற்றும் சலுகை கொடுப்பனவுகள் உட்பட இலங்கை சமூகப் பாதுகாப்புசபையின் அனைத்து முகாமைத்துவ நடவடிக்கைகளையும் டிஜிட்டல் தளத்திற்குக் கொண்டுவரும் செயல்முறை தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது.
இதை செயல்படுத்துவதன் மூலம், சமூகப் பாதுகாப்பு சபை 2026 முதல் அதிக செயல்திறனுடன் செயல்படவும் புதிய உறுப்பினர்களை ஆட்சேர்ப்பு செய்வதை துரிதப்படுத்தவும் முடியும் என்று கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தெரிவித்தார்.