Last updated on April 11th, 2023 at 07:59 pm

பயணம் மற்றும் சுற்றுலா தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டாம் : எச்சரிக்கை!

பயணம் மற்றும் சுற்றுலா தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டாம் : எச்சரிக்கை!

பண்டிகை காலத்தின் போது, மக்கள் தமது சுற்றுப்பயணங்கள் பற்றிய விபரங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை  தவிர்க்குமாறு பொதுமக்களை பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இன்று திங்கட்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ,

பொது மக்கள் சமூக ஊடகங்களில் தமது பயணங்கள் மற்றும் சுற்றுலா தகவல்களைப் பகிர்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.

இந்த பண்டிகை காலப்பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் குழுக்கள் இந்த தகவல்களை பயன்படுத்தி வீடுகளில் கொள்ளையடிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், வீடுகளை விட்டு வெளியே வருபவர்கள் வெளியில் இருந்து தங்கள் சிசிடிவி கேமராக்களை இயக்கவும், கண்காணிக்கவும் தவற வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்