‘சமூக சக்தி’ பயிற்சிக் குழாம்களை நிறுவுவதற்கான வதிவிட செயலமர்வு

 

‘‘சமூக சக்தி’ வறுமை ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் குறித்து பிரதேச மட்டத்தில் அதிகாரிகள் மற்றும் ஏனைய தரப்பினர்களை தெளிவுபடுத்தும் மாவட்ட ரீதியிலான பயிற்சிக் குழாம்களை நிறுவுவதற்கான பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான வதிவிட செயலமர்வு செவ்வாய்க்கிழமை மற்றும் நாளை புதன்கிழமை  கிழக்கு மாகாண சபை முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி நிறுவனத்தில் நடைபெறுகிறது.

அம்பாறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் மற்றும் மாகாண சபை அலுவலகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 41 தமிழ் மொழிமூல அதிகாரிகள் மற்றும் 13 சிங்கள மொழிமூல அதிகாரிகள் உட்பட 54 அதிகாரிகள் இதில் பங்கேற்கின்றனர்.

இந்த செயலமர்வு‘சமூக சக்தி செயலகம் மற்றும் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு என்பன இணைந்து நடத்தப்படுகிறது. ‘சமூக சக்தி செயலகம் மற்றும் ஜனாதிபதி செயலக அதிகாரிகள் இதில் வளவாளர்களாக பங்களிப்புச் செய்கின்றனர்.