சமஷ்டி முறையிலான அதிகார பகிர்வு தொடர்பான கருத்தரங்கு
-கிரான் நிருபர்-
ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வினை வழங்க வேண்டும் என்பது பற்றிய மக்கள் பிரகடனம் குறித்தான தெளிவுபடுத்தல் செயலமர்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது.
மட்டக்களப்பு தன்னாமுனை மியானி தொழில் நுட்ப நிலையத்தில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இந்த செயலமர்வு நடைபெற்றது.
நிகழ்வில் பல்கலைக் கழக் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், இளைஞர் யுவதிகள், அகம் மனிதாபிமான அமைப்பின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கான தீர்வினை நோக்கிய 100 நாள் செயற்பாட்டு நாளில் வெளியிடப்பட்ட மக்கள் பிரகடனம் நூலாக்கப்பட்டு அது தொடர்பிலும் விளிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இணைந்த வட கிழக்கின் அவசியம் அதன் மூலம் தமிழ் பேசும் மக்கள் உட்பட வடகிழக்கில் வாழ்வோர் அடையப் போகும் நன்மைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
நிகழ்வில் வளவாளராக அமைப்பின் உறுப்பினர் அ.மதன் கலந்து கொண்டு விரிவுரையாற்றினார்.
பிரகடனத்தின் ஊடாக மக்களால் முன்வைத்த சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு பற்றிய தெளிவை இளைஞர்கள், சமூக ஆர்வலர்களுக்கு ஏற்படுத்துவதோடு அவர்களது கருத்துக்களை உள்வாங்கப்படுவதும் இன்றைய கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாகும் என ஏற்பாட்டாளர்களால் கருத்து முன்வைக்கப்பட்டது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்